Friday, April 7, 2023

என்றும் வேண்டும்..ஆரோக்யமான வாழ்க்கை

சமீப காலத்தில் இளம் வயதில் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக ஆண்கள் சற்று கூடுதலாக பார்க்கிறேன். நமக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா என்று இது குறித்து ஆய்வு கட்டுரைகளை அலசிய போது கவலை அளிப்பதாக தான் இருக்கிறது. இந்தியாவில் முதல்முறை பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களில் ஐந்தில் ஒருவர் நாற்பது வயதுக்கு குறைவானவர் என்பது ஆய்வு உண்மை. ஏன் இப்படி இளம்வயதிலேயே பக்கவாதம் ஏற்படுகிறது ?. நம்மிடையே உள்ள தவறான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
போதிய தூக்கமின்மை, தவறான உணவு முறை ( இதில் அர்த்த ராத்திரியில் பிரியாணி சாப்பிடுவது குறித்தே தனி கட்டுரை எழுதலாம்), உடற்பயிற்சி .. இல்லை .. உடல் அசைவே இல்லாத நிலை, புகைபிடித்தல், மது பழக்கம்  - இவை யாவும் உடலில் கொழுப்புசத்து அதிகமாக சேர்த்தல், ரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணிகள்.. அதோடு ..பக்கவாதம் வருவதற்கான வழிகள்.
போட்டி மனப்பான்மையோடு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது சரி தான். அதே சமயம் .. சுவர் இருந்தால் தான் சித்திரம்.
Appraisal .. Onsite .. promotion இவற்றோடு .. adequate quality sleep .. nutritious food .. healthy lifestyle என்பது பற்றியும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் .. வரும் காலங்களில் முறையற்ற வாழ்க்கை முறை தான் மனிதகுலத்திற்கு பேரிடராய் அமையும்.

2 comments: